2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கொள்ளையிட முயற்சித்த சிறுவன் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, அம்பதென்னை பிரதேசத்திலுள்ள வீடொன்றை உடைத்து பொருட்களை கொள்ளையிடுவதற்கு முயற்சித்ததாகக் கூறப்படும்  13 வயதான  சிறுவனொருவனை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவ்வீட்டின் பின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் இச்சிறுவன் உட்புகுந்த வேளையில், இதனைக் கண்ட பிரதேசவாசிகள் அவ்வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது இச்சிறுவன் தன்னைத்தானே கட்டிக் கொண்டு கொள்ளையர்கள் தன்னைக் கட்டியதாக நாடகமாடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுவனின் நாடகம் அம்பலமானதைத் தொடர்ந்து அவனைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .