2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஐக்கிய தேசிய தோட்ட தொழிலாளர் காங்கிரஸிற்கு ஒரு வருடம் பூர்த்தி

Super User   / 2013 நவம்பர் 24 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பாயிஸ்


ஐக்கிய தேசிய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பதுளை - மஹியங்கனை வீதியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரான்டோவின் இல்லத்தில் இன்றத கூட்டம் இடம்பெற்றது.

பதுளை மாவட்ட ஐக்கிய தேசிய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாதர் சங்கத் தலைவர்கள், இளைஞர் சங்க தலைவர்கள் என பலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு பதுளை பிரதேச சபை உறுப்பினர் ராதா கிருஷ;ணன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் விசேட விருந்தினராக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனான்டோ மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .