2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பிரதேச சபை உறுப்பினர் ஜனநாயக கட்சியில் இணைவு

Super User   / 2013 நவம்பர் 24 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியில் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் வை.எம்.டபிள்யூ. பண்டார யாப்பா இணைந்துகொண்டுள்ளார்.

நுவரெலியாவிலுள்ள ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற மகளிர் பிரிவினருக்கான கூட்டத்தின்போதே இவர் இணைந்துகொண்டுள்ளார்.

இதன்போது ஜனநாயக கட்சியின் மகளிர் பிரிவு தலைவி அனோமா பொன்சேகாவிடம் இருந்து கட்சியின் அங்கத்துவத்தை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்.

இந்த கூட்டம் ஜனநாயக கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் தினேஸ் கிரிசாந்த தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .