2026 மே 15, வெள்ளிக்கிழமை

மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலைக்கு எண்ணெய் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற ரயில்இ வட்டவளை ரயில் நிலையத்துக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை 02.05 மணியளவில் தடம்புரண்டது.

இதனையடுத்துஇ மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில்கள் வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளன.

தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .