2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொட்டகத்தெனவில் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில்

Kogilavani   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லசந்த நிரோஷன பெரேரா

கொட்டகத்தெனவில் நேற்று திங்கட்கிழமை (6) பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்காக விசேட அதிரடி படையைச் சேர்ந்த 50 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கஹவத்தை, கொட்டகத்தெனவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(5) காணாமல்போன பெண், நேற்று திங்கட்கிழமை அப்பிரதேசத்திலுள்ள நீரோடையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது பிரேத பரிசோதனை, இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.

இவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப் படையினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொட்டகத்தெனவில் இதுவரை 18 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X