2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

லொறி விபத்து

Kogilavani   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

தம்புள்ளையிலிருந்து வெலிமடை, கெப்பட்டிபொல நோக்கி மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறி, கினிகத்தேனை கடவளை பிரதேசத்துக்கு அண்மித்த பகுதியில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாமயடைந்த சாரதி, நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .