2025 ஜூலை 16, புதன்கிழமை

விபத்தில் ஐவர் படுகாயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் வளைவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமன பஸ் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவலப்பிட்டியிலிருந்து டயகம நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸே வெள்ளிக்கிழமை (10)  விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பஸ் சாரதியை திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X