Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
நாடாவிய ரீதியிலுள்ள தபாலகங்களில் பணிபுரியும் தபால் ஊழியர்கள் கறுப்புப்பட்டியணிந்து தமது கடமைகளில் திங்கட்கிமை (20) ஈடுபட்டனர்.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகஸ்தர்களுக்கான சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, ஹட்டன் தபால் மற்றும் தொலைத்தொடர்பு நிலையங்களில் பணிபுரியும்; ஊழியர்களே கறுப்புப்பட்டியணிந்து கடமையில் ஈடுப்பட்டனர்.
இது தொடர்பில் ஹட்டன் தபாலக ஊழியர்களிடம் வினவிய போது,
2015 ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட, தபால் சேவையை நவீனமயப்படுத்தல், சம்பளத்துக்கு மேல் நூற்றுக்கு இருபது சதவீதம் வழங்குதல், இரண்டு நிலை தர அதிகாரிகளுக்கான வெற்றிடங்களுக்கு புதியவர்களை இணைத்தல் போன்ற விடயங்களை நிறைவேற்ற கோரியே மேற்படி நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், மேற்குறிப்பிட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாவிடின் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கொழம்பு, அனுராதபுரம், கண்டி, காலி, குருநாகல், பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதான பகுதிகளிலே இவ் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025