2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இறக்குவானை இளைஞனை காணவில்லை

Sudharshini   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பை படஹேன கிராமத்தில் வசித்து வந்த யூ.பிரேமதிலக்க என்ற 25 வயது  இளைஞனை கடந்த 11ஆம் திகதி முதல் காணவில்லை என குடும்பத்தாரால் இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞன் கூலி தொழில் செய்துவந்தார் எனவும் தொழிலுக்கு சென்றிருந்த நிலையிலேயே, கடந்த 11ஆம் திகதி முதல் அவர் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனை இறக்குவானை பொலிஸார் தேடிவருவதாகவும் அவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .