2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

வனராஜா, காசல்ரீ நீர்தேக்கத்துக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் வனராஜா மேற்பிரிவு தோட்ட மக்கள் புதன்கிழமை(22) காலை ஹட்டன்- பொகவந்தலாவை பிரதான வீதியை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு நேரங்களிலே கழிவுகள், அதிகமாக கொட்டப்படுவதாகவும் இவ்வாறு கழிவுகளை கொட்டுவதால் சூழல் மாசடைவதுடன் தோட்ட தொழிலாளர்கள் தொழிலில் ஈடுப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

அவ்வழியாக பயணம் செய்யும் பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும்  இதுதொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு  பலமுறை அறிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவதாக உறுதிமொழி வழங்கியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .