2025 ஜூலை 14, திங்கட்கிழமை

உயிர் குடித்த சூதாட்டம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி, கொலின் கிரஷன் எனும் கிராமத்தில் தனது நண்பர் ஒருவரது வீட்டின் மேல் மாடியில் சக நண்பர்களுடன் சூதாட்டத்தில்; ஈடுபட்டிருந்த நாபர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவத்தில் இரத்தினபுரி சமகிபுர பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் சஞ்ஜீவ (32) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, இவர்களை கைது செய்ய பொலிஸார்  வருவதாக கிடைத்த தகவலையடுத்து, மேற்படி நபர் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தப்பி செல்ல முற்பட்ட போதே அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .