Princiya Dixci / 2015 ஏப்ரல் 24 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
புஸ்ஸலாவை கொத்மலை, 474எம் கிராமசேவகர் பிரிவு பெரட்டாசி தோட்டம், ரஸ்புருக் தோட்டத்தில் தனது தாயான திருமதி மாரிமுத்து லெட்சுமி (வயது 68) அடித்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சந்தேகநபரான 46 வயதான மகன், மாரிமுத்து குணசேகரன் என்பவரே இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிவித்த கண்டி பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.
தாயை கொலைச்செய்த சம்பவம் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமையே இடம்பெற்றுள்ளது.
அன்றைய சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த தாய்க்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர் அதில் நால்வர் ஆண் பிள்ளைகள் ஆவர். ஒரு மகன் இறந்து விட்டார், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், தனது மனைவியை இழந்துள்ள இரண்டாவது மகனான மாரிமுத்து குணசேகரன் (வயது 46) என்பருவருடனே வசித்து வந்துள்ளார்.
பெரட்டாசி தோட்டம் ரஸ்புருக் பிரிவில் குடியிருப்பு தொகுதி 26, வீட்டு இலக்கம் 04 இல், வாழும் இரண்டாவது மகனுக்கு குணசேகரன் குகேந்திரன் என்ற 16 வயதான மகனும், 5 வயதில் பெறாத மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில், தாய்க்கும் மகனுக்கு அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்படுவது வழக்கம். எப்போதும் போல 16ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இருவருக்கும் இடையில் தகறாறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, 'என்னை காப்பாற்றுங்கள்', 'என்னை கொல்ல போரான்' என்ற அபயக்குரலும் அயலவர்களுக்கு கேட்டுள்ளது. இவ்வாறான அபயக்குரல் அடிக்கடி கேட்பதால் அயலவர்கள் அதனை பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை.
மறுநாள் காலை 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை, குணசேகரன் மகனான குகேந்திரன் வீட்டுக்கு திரும்பிய போது, பாட்டி இறந்து இருப்பதை கண்டுள்ளார். அத்துடன் தன்னுடைய தந்தையான குணசேகரன், மலசலக்கூடத்துக்கு அருகில் குழி ஒன்றையும் வெட்டிக் கொண்டிருந்துள்ளார். மேலும், மலசலக் கூட குழியின் மூடியையும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பொது மக்களும் கண்டுள்ளனர். இதனையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தினால் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று சந்தேக நபரான குணகசேகரன், ஹெம்மாத்தகமவுக்கு சென்று தான் விற்ற மரக்கறிக்கான பணத்தை முதலாளியிடம் பெற்றுக்கொண்டு மது போதையில் இருந்துள்ளார். வீட்டுக்கு வந்தவுடன் பிள்ளைகளை வீட்டிலிருந்து உறவினர் வீட்டுக்கு விரட்டியுள்ளார். இதன் பின்னரே தாய்க்கும் மகனுக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது.
கடுமையாக தாக்கப்பட்டு அங்கங்கள் உட்பட முகம் கூட தெரியாத அளவுக்கு சேதமாக்கப்பட்ட நிலையிலேயே தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பின் சாரி, சேட் மற்றும் துணிகள் கொண்டு சடலத்தை சுற்றி, அதன்மீது நஞ்சு மருந்து தெளிக்கப்பட்டுள்ளது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

40 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
2 hours ago