Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை இந்திய காங்கிரஸின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் அப்துல் அஸீஸின் 25ஆவது சிரார்த்த தினம் ஞாயிற்றுக்கிழமை (26) தலவாக்கலை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அஸீஸ் மன்றம் ஆகியவற்றின் தலைவருமான அஷ்ரப் அஸீஸின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில். தலவாக்கலை நகரசபைத் தலைவர் அசோக சேபபால பிரதம விருந்தினராக கலந்துக் கொள்ளவுள்ளார்.
முன்னாள் அதிபரும் பிரபல சமூக ஆய்வாளருமான எம்.முத்துவேல் உட்பட அஸீஸ் மன்றத்தின் உயர்மட்ட அங்கத்தவர்களும் இதில் உரையாற்றுவார்கள்;. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஏற்பாட்டாளரும் அஸீஸ் மன்ற அமைப்பாளருமான ஆர்.இராமையா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago