2026 மே 15, வெள்ளிக்கிழமை

ஒரு கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பாரியளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை ஒரு கிலோகிராம் கஞ்சாவுடன் நேற்று திங்கட்கிழமை (27) கைது செய்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டுகஸ்தோட்டை, பூஜாபிட்டிய மாரத்துகொடை பிரதேசத்தில் வைத்து 48 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் குடும்ப அங்கத்தவர்கள் வெளிநாட்டில் வசிப்பதனால் எவ்வித பொருளாதார கஷ்டமும் இல்லாத நிலையில், கஞ்சா பாவனைக்கு அடிமையாகி, விற்பனைக்கும் முன்வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேப நபரை, கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (28) ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .