Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்டத்துறை தமிழ் மொழி மூல பாடசாலைகளை அடிப்படையகக் கொண்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தவிர்க்கமுடியாத காரணத்தால் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஏற்கெனவே குறிப்பிட்டது போல 30ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்படவிருந்த குறித்த நியமனமானது எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இது தொடர்பான கடிதங்கள் இன்று தபாலிடப்படவுள்ளன. நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாகவே இந்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பு இந்த நியமனங்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்குவதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் அவர்களுக்கான கடிதங்கள் கிடைத்தவுடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு சமூகமளித்து தமது நியமனக்கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago