Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 05 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
மலையகப் பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடுகளை தவிர்த்து, நேர்மையான முறையில் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரும் இரத்தினபுரி மாவட்டத்தின் பிரபல சமூகசேவைளரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி வழங்கப்படவுள்ள மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனம் குறித்து செவ்வாய்க்கிழமை (05) ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
நியமனம் பெறவுள்ள மலையக ஆசிரியர் உதவியாளர்கள் அனைவருக்கும் பயிற்சிகள் மற்றும் பட்டப்படிப்பக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, ஆசிரியர் உதவியாளர் பதவியை இல்லாமல் செய்து அவர்களை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்ள வேண்டும்.
அத்தோடு, ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சம்பளம் அவர்களின் பொருளாதாரத்துக்கு போதுமானதல்ல. எனவே, அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்வரும் 8ஆம் திகதி மலையக ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது பாராட்டத்தக்க விடயமாகும். அதேவேளை, ஆசிரியர் உதவியாளர் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு இதுவரை பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையிலேயே நியமனம் வழங்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.
பரீட்சைக்கு தோற்றியவர்களின் பெறுபேறுகள் சம்பந்தப்பட்வர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பே, அவர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பது இவ்வளவு காலமாக வளக்கமாக காணப்பட்டது. ஆனால், இம்முறை வழங்கப்படவுள்ள மலையக ஆசிரியர் நியமனம் குறித்த விடயத்தில் அது மாற்றப்பட்டது. அதாவது பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு பரீட்சை பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்படாத நிலையில் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதன் காரணத்தால் ஆசிரியர் உதவியாளர் நியமனம் குறித்து பரீட்சைக்கு தோற்றிவர்களும் நேர்முகப் பரீட்சைக்கும் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் தமக்கு 8ஆம் திகதி நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகள் இதுவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்காத காரணத்தால் பரீட்சை எழுதி நேர்முகப் பரீட்சைக்கு சென்ற அனைவரும் தமக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கும் என்று நியமனக் கடிதத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.
எவ்வாறாயினும் நியமனம் பெறும் மலையக ஆசிரியர் உதவியாளர்கள் அனைவரும், மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடனும் பொருப்புடனும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
49 minute ago
58 minute ago