2025 ஜூலை 09, புதன்கிழமை

பாவனைக்குதவாத நிலையில் உணவு பொருட்கள் மீட்பு

Kogilavani   / 2015 மே 06 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக வழங்கப்படவிருந்த உணவு பொருட்கள் பழுதடைந்த நிலையில் கொடியாகலை, மகப்பேற்று வைத்தியசாலையிலிருந்து நேற்று புதன்கிழமை (6) மீட்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவ கொட்டியாகலை, கெகர்ஸ்வோல்ட், கெம்பியன் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த போசனை பொதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில், நெத்திலி மற்றும் பச்சை அரிசி என்பன பாவனைக்குதவாத முறையில் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இவ் உணவு பொருட்களை வழங்கிய தனியார் கடைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் எச்.எம்.பீ.ஹேரத் தெரிவித்தார்.

பாவனைக்குதவாத உணவுபொருட்களை தவிர்த்துவிட்டு முட்டை, செமன்;, உழுந்து, பயறு, நிலக்கடலை, கடலை, பருப்பு ஆகியவை அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .