George / 2015 மே 09 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் படுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த சரக்கு ரயிலில் இன்று சனிக்கிழமை(09) மாலை குறித்த பெண் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயிலில் மோதி படுகாயமடைந்த பெண், டிக்கோயா தரவளை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய செல்வராஜா ரஞ்சனி என தெரியவந்துள்ளது.
குறித்த பெண், மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
43 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
2 hours ago