Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மே 12 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
கொட்டகலை, ரொசிட்டா வீடமைப்பு திட்டத்துக்குட்பட்ட குடியிறுப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வட்டித்தொகையானது முழுமையாக நீக்கப்பட்டுள்ளதுடன் குடியிறுப்பாளர்களுக்கு, வீட்டுரிமைப்பத்திரங்களை மிகவிரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை ரொசிட்டா பகுதியில் 1988 ஆம் ஆண்டு அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானால் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்துக்கான வீட்டுரிமைப்பத்திரங்களை மிகவிரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நீண்டகாலமாக கொட்டகலை ரொசிட்டா பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான வீட்டு உரிமைப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்தமை தொடர்பில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்குழு நேற்று திங்கட்கிழமை(11) வழங்கியுள்ளது.
இதற்கமைய 2003 ஆம் ஆண்டு அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை மட்டும் செலுத்தி தமது காணிக்கான வீட்டு உரிமைப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தையின் பின்பு, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வட்டித்தொகையானது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி குடியிறுப்பாளர்களுக்கு அவர்களுக்கான கடிதங்கள் தபாலிடப்பட்டுள்ளன.
வீட்டு உரிமையாளர்கள், குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை உடனடியாக செலுத்த் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, அமரர் சந்திரசேகரன் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அமைக்கப்பட்ட 25,000 வீடுகளுக்கான வீட்டு உரிமைப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இடம்பெற்று வருவதோடு அவர்களுக்கான உரிமைப்பத்திரங்களும் மிகவிரைவில் பெற்றுக் கொடக்கப்படவுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
07 Jul 2025
07 Jul 2025