Sudharshini / 2015 மே 12 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
டிக்கோயா பட்டல்கலை தோட்டத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக போடைஸ் பகுதியிலிருந்து சென்றுகொண்டிருந்த துவிச்சக்கரவண்டி, சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இதில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து திங்கட்கிழமை (11) இரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதென ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
2 hours ago