Kogilavani / 2015 மே 18 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய காலத்துக்குள் 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுகொடுக்காவிட்டால் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஹட்டனில் அடுத்தவாரம் ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்;கீட்டில் நுவரெலியா மாவட்டத்தில் முதற்கட்டமாக 250 தோட்டங்களுக்கு நலன்புரி பந்தல்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தருவதாகவும் மக்களை குழப்ப வேண்டாமெனவும் சிலர் கூறுகின்றனர்;. இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் நாம் பொறுமை காக்கின்றோம். எனினும் தொடர்ந்து இந்த விடயத்தில் சாக்குப் போக்குக் காட்டுவார்களானால் நாம் தொழிலாளர்களைத் திரட்டி போராட வேண்டிய நிலைமை ஏற்படும்' என தெரிவித்தார்.
'இதுவரை காலமும் அதிகாரத்தில் இருந்தவர்களால் செய்ய முடியாததை நாம் நூறு நாள் வேலைத்திட்டத்தில் செய்து காட்டியுள்ளோம். 375 தனி வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றோம். தோட்டத் தொழிலாளர்களுக்குக் காணி உறுதிகளை வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். இருந்த போதும் எம்மீது காழப்புணர்வு கொண்டவர்கள் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இவற்றை நம்பக்கூடிய நிலைமையில் எமது மக்கள் இல்லை' என அவர் மேலும் கூறினார்.
மக்களின் நலன்கருதியே செயற்பட்டு வருகின்றோம். தேர்தல் முறை மாற்றத்தின் போது எமது மக்களுக்குப் பாதிப்படையாத வகையில் நாம் செயற்பட வேண்டி தேவை ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் நாம் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனவே எதிர்வரும் தேர்தலில் எமது வெற்றியை நாம் உறுதி செய்து கொள்ளவேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.



1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago