Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மே 20 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா மாவட்டத்தில் 1,500 இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சுகததாச தேசிய விளையாட்டுக்கள் கட்டடதொகுதி அதிகாரசபையின் தலைவர் விஜயரட்ன தேவகெதர தெரிவித்தார்.
கிராமிய,பெருந்தோட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட 5 தேர்தல் தொகுதிகளில் இந்த அபிவிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைவாக ஐந்து தேர்தல் தொகுதிகளிலும் 75 விளையாட்டு மைதானங்கள் தலா 20 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. ஒருதேர்தல் தொகுதிக்கு 15 என்ற வகையில் இந்த அபிவிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக நுவரெலியா பரிசுத்ததிருத்துவ மத்திய கல்லூரி மைதானம், அம்பகமுவை சுகத்திலக விளையாட்டுமைதானம்,கொத்மலை காமினி திசாநாயக்க விளையாட்டு மைதானம் என்பவையும் இவ் அபிவிருத்தியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை,ஒருதேர்தல் தொகுதிக்கு 10 என்றவகையில் 50 கரப்பந்தாட்ட மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இவற்றில் ஒருதொகுதிக்கு இரண்டு என்ற அடிப்படையில் 10 மைதானங்கள் தலா 22 இலட்சம் ரூபாய் செலவில் முழுமையானஅளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதேவேளை, ஐந்து உடற்பயிற்சி நிலையங்கள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதிக்கு 400 இலட்சம் ரூபாவும் வலப்பனைதொகுதிக்கு 200 இலட்சம் ரூபாவும் நுவரெலியா தொகுதிக்கு 276 இலட்சம் ரூபாவும் கொத்மலைதொகுதிக்கு 266 இலட்சம் ரூபாவும் அம்பகமுவைக்கு 275 இலட்சம் ரூபாவும் என 1,417 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தொகையை விட கரப்பந்தாட்ட மைதானத்துக்கான தொகை அதிகரிக்குமெனஅவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago