Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மே 20 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சுஜிதா
பதினெட்டு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கவனிப்பாரின்றி காணப்படும் தலவாக்கலை, மட்டுக்கலை தோட்ட கலாசார மண்டபத்தை, இடப்பற்றாக்குறையுடன் இயங்கும் மட்டுக்கலை தமிழ் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளுக்காவது வழங்க வேண்டும் என பாடசாலையில் அபிவிருத்தி சங்கமும் பெற்றோரும் சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
தலவாக்கலை, மட்டுக்கலை தோட்டத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டம் சேதங்களுக்குள்ளாகி கவனிப்பாரின்றி காணப்படுகின்றது.
நுவரெலியா மாவட் டநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடம், ஆரம்பத்தில் கலாசார மண்டபமாக கூறப்பட்டபோதும் பின்னர் கணினி மத்திய நிலையமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
எனினும், தற்போது இக்கட்டடம் விலங்குகள் சரணாலயமாக காட்சியளிக்கின்றது.மக்களின் பாவனைக்காக நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடம், ஒருசில விசமிகளால் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதனை மீளவும் தோட்ட மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கானநடவடிக்கைகளைஉரிய தரப்பிரனர் செய்துதரவேண்டும் என்றும் தோட்டமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அவ்வாறு தரமுடியாவிடின் இந்தகட்டடத்தை இடப்பற்றாக்குறையுடன் இயங்கும் மட்டுக்கலை தமிழ் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளுக்காவது வழங்க வேண்டும் என்று பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பெற்றோர்களும் கோரிக்கை விடுகின்றனர்.
இப்பாடசாலை 276 மாணவர்களுடன் 80 ஒ25அடிகட்டடத்தில் இயங்கிவருகிறது. இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் இட நெருக்கடிகளுடன் தமதுகற்றல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கட்டடத்தை பாடசாலையின் பாவனைக்காகவாவது பெற்றுத்தர வேண்டுமெனகோரிக்கை விடுகின்றனர்.
இக்கட்டடம் குறித்து நுவரெலியா பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் வினவியபோது,தங்களது கட்சியின் உயர்பீடத்துடன் கலந்துரையாடி, கட்டடத்தை உறியவர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago