2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தோட்ட முகாமையாளருடன் பேசுவதற்கு தயாரில்லை: வடிவேல் சுரேஷ்

Kogilavani   / 2015 மே 20 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

'பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் மனிதாபினமானமற்ற முறையில் நடந்துகொள்ளும் பதுளை,மல்வத்தை பிளான்டேஷன் - பிரிவு இரண்டின் பணிப்பாளர் மற்றும் டிக்வெல்லை தோட்ட முகாமையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாம் தயாரில்லை. மேற்படி இருவரின் அடவாடித்தனங்களை வன்மையாக கண்டிப்பதாக பதுளை மாவட்ட கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

'மேற்படி பிளான்டேஷனுக்குட்பட்ட டிக்வெல்ல தோட்டத்தின் 6 பிரிவுகளை சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படவேண்டும்; என்பதுடன் இதுதொடர்பில் தகுதிவாய்ந்த அதிகாரிளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாம் தயாராக உள்ளோம்'எனவும் அவர் தெரிவித்தார்.

பதுளை,மல்வத்தை பிளான்டேஷன் டிக்வெல தோட்டத்தின் 6 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வெள்ளிக்கிழமை(15) முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுமுகமாக பதுளை மாவட்ட உப-தொழில்  ஆணையாளர் முன்னிலையில் அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை (18) பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில்,அமைச்சர் வடிவேல் சுரேஷ்;, மல்வத்தை பிளான்N;டஷன் பிரிவு இரண்டின் பணிப்பாளர், தொழிற்சங்க பிரதிநிதிகள்  உட்பட பலர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடல் தொடர்பில் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்;ந்தும் தெரிவித்த அவர்,

மேற்படி பணிப்பாளர், டிக்வெல்ல தோட்டத்துக்குட்பட்ட 6 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக எனக்கு அறிய கிடத்தது. தேயிலை தோட்டங்கள் காடுகளாக இருப்பதாகவும் பாம்பு, அட்டைக்கடிக்கு மத்தியில் தம்மை பணிபுரியுமாறு பணிப்பதாகவும் தோட்ட தொழிலாளர்கள் அங்கலாய்கின்றனர். இதனைவிட தோட்ட நிர்வாகமானது தொழிலாளர்களை ஏளனமாக நடத்துவதாக அறிய கிடைத்தது.

இப்பிரிச்சினைகள் தொடர்பில் தோட்ட மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அதுதோல்வியில் முடிந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை 8 கோரிக்கைளை முன்வைத்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடயம் எனது கவனத்து கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பதுளை மாவட்ட தொழிலாளர் திணைக்கள ஆணையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

இதன்போது மேற்படி பிளாண்டேஷன் பிரிவு இரண்டின் பணிப்பாளர் மற்றும் டிக்வெல்ல தோட்ட முகாமையாளர் ஆகியோர் மக்களின் கோரிக்கைகைள புறக்கணித்ததுடன் கொஸ்லாந்தை மக்கள் உட்பட தோட்டத்தொழிலாளர்களை மிகவும் தரங்குறைவாக பேசினார். இப்பேச்சுவார்த்தை கைகலப்புவரை சென்றது. மேற்படி இருவரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாககூறி வெளிநடப்பு செய்தோம்;' என தெரிவித்தார்.

இந்நிலையில்,பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி பிரதேச மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .