2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாண மட்டத்தமிழ் மொழி தினப்போட்டி பரிசளிப்பு நிகழ்வு

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

கடந்த வருடத்துக்கான மத்திய மாகாண மட்டத்தமிழ் மொழி தினப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கண்டி,  பல்லேகல மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில், மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கௌரவ அதிதியாகவும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராம் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் துரைமதியுகராஜா, மத்திய மாகாண செயலாளர் விஜேரட்ண, மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஈ.பி.டி.கே. ஏக்கநாயக்க, மாகாண பிரதமச் செயலாளர் எம்.எஸ். பிரேமவன்ச, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் மாயாதுன்னே, மாகாண உதவிச் செயலாளர் தமிழ் கல்வி அமைச்சு சத்தியேந்திரா ஆகியோர் உட்பட வலயகல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .