Gavitha / 2015 மே 21 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த 10 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை, அதே பஸ்ஸில் பயணித்த பயணிகள் மடக்கிப்பிடித்து நாவுலை பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்த பஸ் வண்டியில் தனது தாயாருடன் சென்று கொண்டிருந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதை கண்ட பஸ்ஸில் பயணித்த பயணிகள் அவரை பிடித்துள்ளனர்.
விசாரணையின் போது, பஸ்ஸில் தனக்கு தூக்கம் வந்துவிட்டதாகவும் தூக்கத்தில் விழும்போது அருகில் இருந்த சிறுமி மீது விழுந்துவிட்டதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
2 hours ago