Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மே 20 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் ஆண் ஒருவர் புதன்கிழமை (20) கத்தியால் குத்தி கொலைசெய்யபட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மது போதையில் இருந்த வேலை அவரது சகோதரரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்த இளைஞன் ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலை செய்யபட்ட நபர்; பொகவந்தலாவ பொகவான தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரயராக பணியற்றி வந்ததாகவும் செவ்வாய்க்கிழமை (19) தமது கடமைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய ஆசிரியர் புதன்கிழமை (20) அதிகாலை தமது வீட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கபட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது, கொலை செய்யப்பட்ட நபரும் அவரது தாயரும் சந்தேக நபரும் வீட்டில் இருந்தாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கபட்டவர் 45 வயது மதிக்கதக்க பி.நவனிதரன் என அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததோடு, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025