2025 ஜூலை 05, சனிக்கிழமை

11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இருவர் கைது

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
 
11 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார்கள்   என்ற குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் இருவரை வெள்ளிக்கிழமை (22) கைதுசெய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
  
குறித்த சிறுவனின் பெற்றோரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து, பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 21 மற்றும் 24 வயது மதிக்கதக்க இரண்டு இளைஞர்களை  பொலிஸார் கைது செய்துள்ளார்.
 
குறித்த சிறுவன் பொகவந்தலாவ குயினா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
 
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த சிறுவனை மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .