Kogilavani / 2015 ஜூன் 11 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்
ஆரம்ப பாடசாலைகள், இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வூகூடம் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவில் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண விவசாய,இந்து கலாசார அமைச்சர் எம்.ராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வை ஆரம்பிப்பதற்கு முன் மலையக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பத்மராஜுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமாருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயமும் நுவரெலியா வலயம் கேம்பிரிஜ் ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கூடங்களும் இன்று திறந்து வைக்கப்பட்டன.





17 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
3 hours ago