Kogilavani / 2015 ஜூன் 17 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கவிதா சுப்ரமணியம்
கண்டி மாவட்ட தோட்டத்தொழிலாளர்கள் நல்லாட்சியிலும் பட்டினியில் வாடுகின்றனர் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான எஸ்.அருள் சாமி தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களுக்குட்பட்ட தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர் நேற்று செவ்வாய்க்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கான வேலை மறுக்கப்பட்டுள்ளதால் இவர்கள் பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கான ஒரு நாள் வறுமானம் முற்றுமுழுதாக தடைப்பட்டுள்ளது.
இதுநியாயமற்றது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமை இங்கு மீறப்பட்டுள்ளது.
நல்லாட்சியை விரும்பி வாக்களித்த மக்களுக்கு, பட்டினியே பதிலாக கிடைத்துள்ளது. கடந்த ஆட்சியிலும் இவ்வாறான செயற்பாடுகளே நடைபெற்றது என்றால் தற்போதைய ஆட்சி தோட்டபுற மக்களுக்கு செய்யவிருப்பது என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.
நல்லாட்சியின் கீழ் வாழ்ந்து வரும் தோட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதாகவே எமக்கு தோன்றுகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .