Sudharshini / 2015 ஜூன் 22 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
தலவாக்கலை லிந்துலை பிரதேசத்திலிருந்து பொகவந்தலாவையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட, ஒரு தொகை பாவனைக்குதவாத உணவு பொருட்களை பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்கள் இன்று (22) பிற்பகல் மீட்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையத்தே, குறித்த பொருட்களை தாம் மீட்டதாக பொகந்தலாவைக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் பி.கே.எல்வசந்த தெரிவித்தார்.
மீட்கப்பட்ட உணவு பொருட்களில் வினாகிரி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், தேங்காய் எண்ணெய், இனிப்பு பண்டங்கள், குளிர்பானம், பேரீச்சம்பழம் உட்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பாவனைக்குதவாத உணவு பொருட்கள் காணப்பட்டதாகவும் மீட்கப்பட்ட சில உணவு பொருட்களில் லேபல்கள் காணப்படவில்லையெவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உணவு பொருட்களுடன் வாகனம் ஒன்றையும் சுகாதார பரிசோதகர்கள் கைபற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்புடைய மூவர்க்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சுகாதார பரிசோதகர் பி.கே.எல்வசந்த மேலும் தெரிவித்தார்.





17 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
3 hours ago