Gavitha / 2015 ஜூன் 24 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
தாங்கள் பலமிக்கவர்கள் என்று பெருமையாக கூறிக்கொள்ளும் தொழிற்சங்கங்கள், உறுதியளித்தவாறு 1,000 ரூபாய் சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும். அதை விடுத்து சத்தியாகிரகம் எனும் ஏமாற்று நாடகத்தை மீண்டும் அரங்கேற்றினால், அதற்கெதிராக நாம் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்போம் என்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தை தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரிடம் (23) வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், ஒப்பந்தம் நிறைவு பெறும் ஒவ்வொரு தருணத்திலும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்த போதிலும் அது நிறைவேற்றப்படுவதில்லை.
இந்நிலையில், இம்முறை 1,000 ரூபாய் சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்த தொழிற்சங்கங்கள், தற்போது சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்போவதாக கூறுகிறன. இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
5 minute ago
22 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
49 minute ago