Sudharshini / 2015 ஜூன் 29 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகரத்திலுள்ள உணவகங்கள், விடுதிகள், வெதுப்பகங்கள், சில்லறை மற்றும் தொகை வர்த்தக நிலையங்களை, பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் இன்று (29) திடீர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, பதிவு செய்யப்படாத தண்ணீர் போத்தல்கள், காலவதியான குளிர்பான போத்தல்கள், பழுதடைந்த மரக்கறி மற்றும் உணவு பண்டங்கள் மற்றும் பாவனைக்குதவாத தேயிலை தூள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், அசுத்தமான முறையில் காணப்பட்ட சில்லறை மற்றும் தொகை வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.







6 minute ago
23 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
50 minute ago