Kogilavani / 2015 ஜூலை 03 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட பெண்கள் இருவர் மடுல்கலை வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, பன்விலை கெலாபொக்க தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பஸ்தர் ஒருவர் தனது முதல் மனைவி மற்றும் அம்மனைவியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கத்தி மற்றும் போத்தல்களினால் அவர்களை தாக்கியுள்ளார். இத்தாக்குதில் கழுத்தில் வெட்டு காயங்களுக்குள்ளான அவரது முதல் மனைவியான சர்மிளா (28 வயது) என்பவரும் அவரது தாயாரும் (80 வயது) ஒன்றரை வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் இந்நபரை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
23 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
50 minute ago