Kogilavani / 2015 ஜூலை 03 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தொழிற்சங்கங்களின் பாரம்பரியம் ஒன்றுபட்ட கூட்டுப்பேரம் பேசும் நடைமுறையில் இருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விலகிச்சென்றமை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல' என இலங்கை தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான கே.வேலாயுதம் தெரிவித்தார்.
கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தையின் நான்காம்கட்ட பேச்சுவார்த்தையின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவர்களது நிலைப்பாட்டை மாற்றி மீண்டும்; கூட்டாக பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்ய வேண்டியது முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒன்றிணைந்து நடைமுறைச் சாத்தியமான சம்பளக் கோரிக்கை ஒன்றை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை தொடர்வது மிக இன்றியமையாத தேவைய என அவர் குறிப்பிட்டதுடன்,
அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் தனியார் துறை தொழிலாளர்களுக்கு பரிந்துரைத்த ரூபாய் 2500 சம்பள உயர்வை தோட்ட நிர்வாகங்கள் உடன் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக முக்கியம் எனவும் குறிப்பிட்டார்.
சம்பள அதிகரிப்புக்கான மூன்றாம்; கட்ட பேச்சு வார்த்தையின்போது தோட்ட நிர்வாகங்கள் சமர்ப்பித்த பிரேரணை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நடைமுறையில் பல தொழிலாளர்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் இருபத்தைந்து நாட்கள் வேலை என்ற உத்தரவாதம் எதிர்கால புதிய ஒப்பந்தங்களில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தற்போது வழங்கப்பட்டு வரும் நாளொன்றிற்கான ரூபா.450 அடிப்படை சம்பளத்துடன் அரசாங்கம் அதிகரித்துள்ள ரூபாய் 2500 ஐயும் இணைத்து சகல தொழிலாளர்களுக்கும் ஒரேவிதமான அடிப்படைச்சம்பளம் வழங்க வேண்டும் என்பதே சகல தொழிற்சங்கங்களினதும் எதிர்பார்ப்பாகும்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இப்பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிச் சென்றாலும் மீண்டும் அவர்களை பேச்சு வார்த்தையில் ஈடுபடச்செய்து இரு சாராரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இன்றைய சூழ் நிலையின் தேவைக்கு ஏற்ப சம்பள உயர்வு தீர்மானிக்கப் படவேண்டியது மிக முக்கியமானதாகும்.
அதேநேரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய இரண்டு தொழிற்சங்களான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பும் வெளியேறிச் செல்லாது தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது' என்றார்.
6 minute ago
23 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
50 minute ago