Kogilavani / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனி வழிப் பயணக்காரர்கள் சிலர் மக்களின் வாக்குகளை சூறையாட எத்தனித்தக்கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என நுவெரலியா மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய வம்சாவளி மலையக மக்களினது அரசியல் உரிமைகளை அடையும் தூரநோக்கோடு இத்தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளது. நமது மக்கள் நாடெங்கிலும் பரவலாக 16 இலட்சம் அளவில் வாழ்ந்து வந்தாலும் அதற்குரிய அரசியல் பிரதிநிதித்துவத்தைப் இதுவரை பெற்றதில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் மும்முனைத்தாக்குதலை எதிர்கொள்ளும் எமது கூட்டணி எமது சின்னத்தில் போட்டியிடும் இரண்டுவகை திருடர்களைஅடையாளம் கண்டுள்ளது.இந்த திருட்டுக் கும்பலுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா? அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்கபோகிறீர்களா என மக்கள் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் வாக்குகளையே திருட வருபவர்கள் நாளை அரசியலுக்குள் வந்துவிட்டால் எவ்வாறெல்லாம் உங்கள் அபிவிருத்திக்கான நிதியை திருடுவார்கள் என்பதை சிந்தியுங்கள் என்றார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago