2026 மே 07, வியாழக்கிழமை

சி.வி.க்கும் சந்திரசேகரனுக்கும் வெற்றி சமர்ப்பணம்: திலகராஜ்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

'மலையகத்தில் எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கின்றதோ, அப்போதெல்லாம் தலவாக்கலை மண்ணுக்கென ஒரு வரலாறு இருக்கும். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவே 1947ஆம் ஆண்டு தலவாக்கலை பகுதியிலிருந்து மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்த சி.வி வேலுப்பிள்ளைக்கும் அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு அதே தலவாக்கலை மண்ணிலிருந்து இன்னுமோர் புரட்சியை செய்த அமரர் சந்திரசேகரனுக்கும் எமது வெற்றியை சமர்ப்பணம் செய்கின்றோம்' என நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிபெற்ற மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாங்கள் மூவரும் இன,மத,மொழி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான சேவையை வழங்கத் தயாராக உள்ளோம். மலையகத்தில் அராஜக அரசியல் இல்லாமல் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க உள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .