2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

250 வருடங்கள் பழமையான நாணயங்கள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, வத்துகாமம் பாரதி தமிழ் மஹா வித்தியாலய வளாகத்திலிருந்து சுமார் 250 வருடங்கள் பழமை வாய்ந்த 86 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவு காரணமாக அம்மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

பின்னர் அவை தொடர்பில் ஆராயப்பட்டதைத் தொடர்ந்து அவை 1870, 1892, 1893ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளைச் சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நாணயங்களை மேலதிக ஆராய்வுக்கான தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X