2026 ஜனவரி 21, புதன்கிழமை

393 பேருக்கு அரச நியமனம் வழங்கல்

Kogilavani   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  எம். செல்வராஜா      

ஊவா மாகாண அரச சேவைக்கு, மூவினங்களையும் சேர்ந்த 393 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் நியமனங்கள், அரச செயலக உத்தியோகத்தர் நியமனங்கள் என்ற வகையில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் என்ற ரீதியில் 351 பேருக்கு ஆசிரியர் நியமனங்களும்  அரச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் 42 பேருக்குமாக 393 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஊவா மாகாண நூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி இந்நிகழ்வில், விவசாய இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ச, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X