Freelancer / 2023 மே 02 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென உள்வாங்கப்பட்ட 4,000 ஆசிரிய உதவியாளர்கள் உரிய பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் துரதிஷ்டவசமாக அவர்களில் 400 பேர் இதுவரையில் எந்தவொரு பாடசாலையிலும் நியமன ஆசிரியர்களாக உள்வாங்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
ஆகவே இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து மேற்படி பாதிக்கப்பட்டுள்ள 400 பேரையும் ஆசிரியர்களாக உள்வாங்கு வதற்கு ஆவன செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள எழுத்துமூல கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேல் மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் என மலையக பாடசாலை களை உள்ளடக்கியவாறு 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 4000 ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவோர் குறிப்பிட்ட காலப் பகுதியில் குறித்துரைக்கப்பட்ட பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்து அதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாகாண கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கு மாறும் அதன்பின்னரே நியமனங்கள் வழங்கப்படும் என்ற ரீதியிலும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று ஆசிரிய தொழிலில் நாட்டமுடைய மலையக இளைஞர்களும் யுவதிகளும் விண்ணப்பித்து உள்வாங்கப் பட்டு பயிற்சிகளையும் நிறைவுசெய்து பின்னர் அவர்களில் பெரும் பகுதியினருக்கு நியமனமும் வழங்கப்பட்டன.
12 minute ago
35 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
35 minute ago
40 minute ago
50 minute ago