2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

5 கஜமுத்து : ஐவர் கைது

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக்க

100 இலட்சம் ரூபாய்க்கு விற்பனைச் செய்வதற்காக வைத்திருந்த ஐந்து கஜமுத்துக்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மொனராகலையில் இடம்பெற்றுள்ளது. 

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸாரினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பதுளையிலிருந்து லொறியொன்றின் ஊடாக, மொனராகலைக்கு இந்த கஜமுத்துக்கள் எடுத்துவரப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட ஐவரில், காலி பொலிஸ் பயிற்சி பாடசாலையில் சேவையாற்றும் அம்பாறையைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட், பிபிலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய், மாத்தளைச் சேர்ந்த சாரதி மற்றும் உதவியாளர், தியத்தலாவைச் சேர்ந்த மற்றுமொருவர் என ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (03) கைது செய்யப்பட்ட ஐவரையும், நாளை (05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். 


 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .