Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
503 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன், ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து, மஸ்கெலியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (08) மாலை கைதான மேற்படி நபர், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனத் தெரியவருகிறது. இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலை, 17 உரப்பைகளில் பொதியிடப்பட்டிருந்ததாக, பொலிஸார் கூறினர்.
இவ்வாறுக் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலையானது, ரயிலினூடாக ஹட்டனிலிருந்து கண்டிக்குக் கொண்டுசெல்லப்பட இருந்ததாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரசகியத் தகவலையடுத்தே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நீண்டகாலமாக கழிவுத் தேயிலையை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளாரென்று, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி நபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
42 minute ago
47 minute ago