Kogilavani / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அக்குறணை நீரெல்லை ஆரம்பப் பாடசாலையில், ஆறாம் தரத்துக்கு சித்தியடைந்த மாணவர்களை, அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு அனுமதிக்குமாரு கோறி, மாணவர்களும் பெற்றோரும், பாடசாலைக்கு முனபாக, இன்று (8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீரெல்லை ஆர்மபப் பாடசாலை, அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் போசனை பாடசாலை என்றும் அப்பாடசாலையை விட்டு வெளியேரும் மாணவர்கள், இப் பாடசாலைக்கு உள்வாங்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இருந்தபோதும் அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு மாணவர்களை உள்வாங்குதற்கு பாரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அன்வரை தொடர்புகொண்டு வினவியப்போது, அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நான்கு போசனை பாடசாலைகள் உள்ளன என்றும் அதில் நீரெல்லை பாடசாலை உள்ளடங்குவதில்லை என்றும் கூறினார்.
போசனை பாடசாலைகளிலிருந்து வரும் மாணவர்களை அனுமதித்ததன் பின்னர், மிகுதியாகும் வெற்றிடங்களுக்கு நீரெல்லை பாடசாலையில் கற்ற மாணவர்களை தூரம் அடிப்படையில் அனுமதிப்பதாகவும் தெரிவித்தார்.
இம்முறை 235 மாணவர்கள் ஆறாம் தரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீரெல்லை பாடசாலையில் இருந்து சுமார் 20 மாணவர்களை அனுமதிக்க முடியும் என்றும் அவர்களின் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் கல்வி காரியாலயத்தினால் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தகவலை பெற்றோரிடம் கூறி இருந்தபோதும், பெற்றோர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago