Freelancer / 2022 மே 04 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
எதிர்வரும் 6ம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் அரசுக்கெதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்து இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என என்.டி.எஸ்.நாதன் தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா, தலவாக்கலை, கொட்டக்கலை, டயகம, ஹோல்புறூக், ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவ, கினிகத்தேன, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் கொத்மலை ஆகிய நகரங்களில் ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்ட பேரணிகளிலும் ஈடுப்படவுள்ளது.
இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கும் வரை எமது போராட்டங்கள் ஓய்வதில்லை என்றார். (R)
26 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
41 minute ago
2 hours ago