2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

7 வான் கதவுகள் திறப்பு: தாழ்நிலை மக்களுக்கு எச்சரிக்கை

Gavitha   / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளைப் பகுதியின் ஹுல்ஹிட்டிய நீர்த் தேக்கத்தின் 7 வான் கதவுகளும் திறக்கப்பட்டிருப்பதால், தாழ் நிலப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம், இந்த எச்சரிக்கையை, இன்று (05) விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட நீர்த் தேக்கத்துக்கு அண்மித்த, தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அபாயங்களை எதிர்நோக்கியிருக்கும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, அனைத்து விவரங்களையும் தங்கள் பகுதி கிராம சேவையாளர் ஊடாக, இடர் முகாமைத்துவ நிலையத்துக்கு அறியத்தர வேண்டுமென்றும் இடர் முகாமைத்துவ பதுளை மாவட்ட நிலையம் கேட்டுள்ளது.

தொடர்ந்தும் இப் பகுதியில் மழை பெய்து கொண்டிருப்பதால், மண் சரிவு அனர்த்தங்களும் ஆறுகளில் வெள்ளப் பெருக்குகளும் ஏற்படலாமென்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .