Sudharshini / 2016 மார்ச் 01 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பதில் அதிபர் நியமனம் தொடர்பில், மாணவர்களின் பெற்றோர், இன்று (02) பெற்றோர் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அக்குறணை, அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பதில் அதிபராக எம்.எஸ்.எம்.இக்பால் என்பவர் கடமையில் இருக்கும்போது, மற்றொருவர் பதில் அதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் திங்கட்கிழமை(29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்ப்பு நடவடிக்கையின் மத்தியிலும் புதிய பதில் அதிபர், திங்கட்கிழமை (29) மாலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும்(01) பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பதற்றமான சூழலும் ஏற்பட்டது.
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேல் குழுமியிருந்த பெற்றோர்கள், இன்று பெற்றோர் கூட்டத்தை கூட்டும் தீர்மானத்துடன் திரும்பிச் சென்றனர். இக்கூட்டத்தில் கல்வி அதிகாரிகளையும் கலந்துகொள்ளுமாறு பெற்றோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago