2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

அக்கரப்பத்தனை வைத்தியசாலையை மீளத் திறக்க நடவடிக்கை

Kogilavani   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் மரணமானதையடுத்து காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள அக்கரப்பத்தனை வைத்தியசாலையை மீளவும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா தொற்றாளர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (14) மரணமடைந்தார். 
இதனையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டதுடன், வைத்தியசாலையின் ஊழியர்கள், தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், வைத்தியசாலையும் மூடப்பட்டது.

வைத்தியசாலை மூடப்பட்டதால், நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதைக் கருத்திற்கொண்டு சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வைத்தியசாலையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் முடிவுகள் வெளியானதன் பின்னர், தொற்றுக்குள்ளாகாத ஊழியர்களைக் கொண்டு வைத்தியசாலையை மீளவும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஆறுமுகம் ஜெயராஜன் தெரிவித்தார்.

வைத்தியசாலையை முற்றாக முடக்குவதற்குறிய எவ்விதத் திட்டமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X