Janu / 2025 மார்ச் 10 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்காவின் அறைக்கு அழைத்துச் சென்று அவருடைய கட்டிலில், தங்கையை வன்புணர்ந்தார் என்றக் குற்றச்சாட்டில் மைத்துனர் (தனது மாமாவின் மகன்) கைது செய்யப்பட்ட சம்பவம் வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 23 ஆம் திகதி முதல் பிப்ரவரி 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்ளே இவ்வாறு அந்த சிறுமி வன்புணரப்பட்டுள்ளார்.
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரசேகர கிராம பகுதியில் 13 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார். அவரை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
ஜனவரி 23 ஆம் திகதி முதல் பிப்ரவரி 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் , குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்று வந்து வீட்டில் இருந்தபோதெல்லாம் அவரின் மைத்துனரான ( தனது மாமாவின் மகன்) சந்தேக நபர் வீட்டுக்கு வந்து சிறுமியை அவரது மூத்த சகோதரியின் அறைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கட்டிலில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக குறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
19 minute ago
29 minute ago