2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அதிக விலைக்கு பாட புத்தகங்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் அசௌகரியம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பிரதேசத்தில் இயங்கி வருகின்ற, தனியார் சர்வதேச பாடசாலையொன்று, மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அதிகபடியான விலைக்கு விற்பனை செய்வதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்படி பாடசாலையானது,  பாடப்புத்தகங்களை கொள்வனவு செய்த விலையை விட அதிக விலைக்கு  விற்பனை செய்கின்றது. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விலையை மறைத்து, அதற்கு மேல், பாடசாலையின் பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்வதாகவும் விற்பனைக்கான பற்றுச்சீட்டை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாடசாலையில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்கு, அதிகளவு பணத்தை அறவிடுவதாகவும் பாடசாலையில் மாதாந்தம் மாணவரொருவரிடமிருந்து 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கட்டணம் அறவிடப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால், பாடசாலை நிர்வாகம் இவ்விடயத்தை கவனத்திற்கொண்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்டு வினவிய போது அவர் கூறியதாவது,

'இம்மாணவர்களுக்கு வழங்கிய பாடப்புத்தகங்களை கல்வி அமைச்சின் ஊடாகவும் தனியார் நிறுவனங்களின் ஊடாகவும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலே பெற்றுகொள்கின்றோம்.   குறித்த புத்தகங்களை கொழும்பிலிருந்து கொண்டு வருவதனால் போக்குவரத்து செலவு அதிகரிக்கின்றது. இதன்; காரணமாக அதிக விலைக்கு புத்தகங்களை விற்பனை செய்யவேண்டியுள்ளது. எதிர்வரும் ஆண்டிலிருந்து  குறித்த புத்தகங்களை மாணவர்களே சென்று வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றோம்' என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .