2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2015 நவம்பர் 22 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றில் பயணித்தவரை, எல்ல-வெல்லவாய வீதி, ராவனா எல்ல பகுதியில் வைத்து பொலிஸார் சனிக்கிழமை(21) கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரிடமிருந்து  வோடர் ஜெல் ரகத்தைச் சேர்ந்த அதிசக்திவாய்ந்த 700 கிராம் வெடிமருந்து, ஜெலிட்னைட் குச்சிகள் 5, 6 கிலோகிராம் 250 கிராம் அமோனியம் நைட்ரைட், 64 அடி நீளமுள்ள சேவா நூல் -2, டெடனேட்டர் 10 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .